Tuesday, February 21, 2012

கூடல்

நிலவின் மறைவை கணக்கிட்டு
தேனீக்கள் புறப்பட்டன தேனெடுக்க
ஒன்றைக் கொடுத்து ஒன்றை பெறும்
பண்டை கால பண்ட மாற்று முறையாய்
தேனை கொடுத்து
மகரந்தம் சுமக்க செய்தன சில மலர்கள்.
தேனுக்கு விலையாய்
தேனை உறிஞ்சியவாறே
மகரந்தத்தை மலர்களினூடே
செலுத்திச் சென்றன தேனீக்கள்.
மகரந்த சேர்க்கைக்கு மறுநாள்
புதிதாய் கூடிய மலர்களெல்லாம்
தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டன
வண்டுடன் கூடியதாய்!
மலருக்கெப்படி தெரியும்
வண்டல்ல, அது சுமந்த மகரந்தம்தான்
தன்னுடன் கூடியதென்று.
ஒருபுறமோ குழப்பம்
மறுபுறமோ பெரும் கலகம்
புதிதாய் தேனெடுத்த தேனீக்களெல்லாம்
சண்டையிட்டுக்கொண்டன
தான்தான் மலர்களின் வாரிசு பெருக்கத்திற்கு
காரணமென்று!
கால ஓட்ட நிகழ்வுக்கேற்ப
மீண்டும் ஒரு மகரந்தசேர்க்கைக்காக
மகரந்தத்தை எதிர்பார்த்து மலர்கள்
காத்திருக்க
தேனீக்களெல்லாம் புறப்பட்டன
தேன் வேட்டைக்கு!

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இணைக்கவும்



3 comments:

  1. அன்பின் நண்பரே..உங்களது இந்த வலைத்தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.நேரமிருக்கும் போது வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்
    வலைச்சரத்தில் கவிதை சரம்

    ReplyDelete
  2. அருமையான கவிதை நண்பா

    ReplyDelete
  3. கருத்துக்களுக்கு மிக்க நன்றி!!!

    ReplyDelete